குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உத்தராகண்டில் ஆகஸ்ட் 19,20-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் உத்தராகண்டில் 2026 ஆகஸ்ட் 19, 20 ஆகிய 2 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.

ஆகஸ்ட் 19 அன்று டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாடமிக்குச் செல்லும் குடியரசு துணைத்தலைவர் அங்கு 2025-27-ம் ஆண்டு பிரிவைச் சேந்த இந்திய வனப் பணி பயிற்சி அதிகாரிகளுடன் உரையாட உள்ளார்.

ஆகஸ்ட் 20 அன்று முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் 2024-ம் ஆண்டு பிரிவுக்கான இரண்டாம் கட்ட ஐஏஎஸ் பயிற்சியின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகப் பங்கேற்க உள்ளார்.

அப்போது சர்தார் வல்லபாய் படேல், முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரது சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

Leave a Reply