இருக்கண்குடி திருக்கோயிலில் ரூ.23 கோடி 67 லட்சம் செலவில் பக்தர்களுக்கான கட்டடங்களை முதலமைச்சர் ச ஜோசப் விஜய் திறந்து வைத்தார் .

தமிழக முதல்வர் விஜய் இன்று (18.8.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், இருக்கண்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், 23 கோடியே 67 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள முடிகாணிக்கை மண்டபம், அன்னதானக் கூடம், விருந்து மண்டபங்கள் மற்றும் 235 பூஜைப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.

மேலும், இந்து சமய அறநிலையத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் உதவிப் பொறியாளர் (கட்டுமானம்), உதவி ஸ்தபதி மற்றும் செயல் அலுவலர் (நிலை-1 மற்றும் நிலை-3) ஆகிய பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 80 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

Leave a Reply