வாரணாசி விமான நிலையத்தில் உரிமம் பெற்ற துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் இருவர் காயம்.

இன்று (16 ஆகஸ்ட் 2026), காலை 09:30 மணியளவில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்றில் வாரணாசியிலிருந்து மும்பைக்குப் பயணிக்கவிருந்த திரு கம்லேஷ் கேதார்நாத் ராய் என்ற பயணி உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்திருந்தார்.

கட்டாயப் பாதுகாப்பு நடைமுறைகளை நிறைவு செய்வதற்காக, அந்தப் பயணி நியமிக்கப்பட்ட சோதனைப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆயுதத்தைக் கையாண்டு ஆய்வு செய்தபோது, ​​எதிர்பாராதவிதமாக ஒரு தோட்டா வெடித்தது. இதில், சோதனைப் பணியாளர்களான ரோஹித் ராஜ், சுமன் குமாரி ஆகிய இருவருக்கும் காயங்கள் ஏற்பட்டன.

இருவருக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்காக பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

உள்ளூர் காவல்துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், அந்தப் பயணி விசாரணைக்காகவும், மேல் நடவடிக்கைக்காகவும் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து சிவில் விமானப் பாதுகாப்புப் அமைப்பு ஆய்வு செய்து வருகிறது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply