கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை அச்சுறுத்தி வருவதால், அதை எதிர்கொள்வதற்காக கொரோனா சிகிச்சைப் பணிக்காக தற்போது 2000 செவிலியர்கள், 6 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழக அரசால் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் உடனடியாக பணியில் சேர உள்ளனர். இவர்கள் அனைவருக்குமான உணவு, தங்குமிடம், தமிழக அரசால் வழங்கப்பட இருக்கிறது.
மேலும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், அதை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெருநகர சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 254 விரைவு நடமாடும் மருத்துவக் குழுக்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின் மூலம் காய்ச்சல் மற்றும் கொரோனா கண்டறியும் பணி துரிதமாக நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-எஸ்.திவ்யா.
