“உள்ளாட்சித்தகவல்” செய்தி எதிரொலி!-திருச்சி துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வசிக்கும் 53 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கிய வருவாய்துறை அதிகாரிகள்!

உண்ண உணவில்லை, குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணமில்லை, பட்டினியோடு இருக்கின்றோம் என்ற கோரிக்கையோடு, திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வசிக்கும் பொது மக்களிடமிருந்து, எமது “உள்ளாட்சித்தகவல்” அலுவலகத்திற்கு 12.04.2020 மாலை ஒரு கடிதமும், சில படங்களும் மற்றும் 2 வீடியோவும் வந்தது.

இத்தகவலை, தமிழக முதலமைச்சருக்கும் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்பி வைத்து இருந்தோம். அதை நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் செய்தியாகவும் வெளியிட்டு இருந்தோம்.

இச்செய்திக்கு பிறகு அப்பகுதிக்கு நேரில் சென்ற காவல்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இதுகுறித்து வீடு, வீடாக மக்ளை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், உணவு இன்றி தவித்த 53 ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை, திருவெறும்பூர் வட்டாட்சியர் தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் இன்று நேரில் வழங்கினார்கள்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

இதுகுறித்த முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் கிளிக் செய்யவும்.

http://www.ullatchithagaval.com/2020/04/12/47197/

One Response

  1. MANIMARAN April 18, 2020 8:46 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply