காவல் துறை சார்பில் “கொரோனா” தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் காவல் துறை சார்பில் “கொரோனா” தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்காடு கடைவீதியில் இன்று நடத்தப்பட்டது.

குறைந்தது 1 மணி நேரத்திற்கு ஒரு முறை அனைவரும் கைகளை கழுவ வேண்டும், இருமும் போது கைக்குட்டை வைத்து இரும வேண்டும், மற்றவர்களுடன் பேசும்போது சிறிது இடைவெளி விட்டு பேச வேண்டும் என, ஏற்காடு காவல் ஆய்வாளர் ஆனந்தன் கூறினார்.

மேலும், கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்று அப்பல்லோ மெடிக்கல் பணியாளர்கள் செய்து காண்பித்தனர். பின்னர் அங்கிருந்த கடை உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரும் தங்கள் கைகளை கழுவினர். இந்நிகழ்ச்சியில் உதவி ஆய்வாளர் ரகு உள்ளிட்ட காவல் துறையினர் கலந்துக்கொண்டனர்.

-நே.நவீன் குமார்.

One Response

  1. MANIMARAN March 24, 2020 7:35 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply