“கொரோனா வைரஸ்” மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக “முகக் கவசம்” அணிய வேண்டும், பொது நிகழ்ச்சி மற்றும் பொது இடங்களில் மற்றவர்களிடம் கை குலுக்குவதையும், கட்டி தழுவதையும் தவிர்த்து, அடிக்கடி கை கழுவும் பழக்கத்தை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் “முகக் கவசம்” வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இன்று ஈடுப்பட்டனர்.
இதில் திருச்சிராப்பள்ளி பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ராஜேஸ்வரி, துணைத்தலைவர் செல்லம் தமிழரசன், செயலாளர் ஜெயந்தி ராணி, பொருளாளர் ராஜலட்சுமி, வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், நீமாவதி, கீதாலட்சுமி, விஜயலட்சுமி உட்பட மூத்த வழக்கறிஞர்கள், இளம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
-டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
