தில்லி காவல்துறை சாதி மற்றும் மத வேறுபாடின்றி சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் பாதுகாப்பு வழங்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் கடமைப்பட்டுள்ளது என்றும், மக்கள் வதந்திகளை நம்பக்கூடாது மற்றும் இனவாத பதட்டத்தைத் தூண்டுவதில் ஆர்வமுள்ள குற்றவாளிகள் மற்றும் குழுக்களின் தீய செயல்களுக்கு இரையாகக்கூடாது என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட கலவரங்களைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில், டெல்லியில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமைகளைப் பற்றிய ஆய்வுக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில் மத்திய உள்துறை செயலாளர் மற்றும் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தில்லி வடகிழக்கு மாவட்டத்தில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 36 மணி நேரத்தில் எந்த பெரிய சம்பவமும் பதிவாகவில்லை. பிரிவு 144 இன் கீழ் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில், நிலைமை மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு 10 மணி நேரம் தடை உத்தரவுகள் தளர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
I know you did not check these buildings. Because you seek religion in #DelhiRiotTruth. @AAPDelhi @ReallySwara @narendramodi @dhruv_rathee @ArvindKejriwal @DelhiPolice pic.twitter.com/OOB6O4kRe0
— Mohammad Owais (@Mohamma48689064) February 28, 2020
Do us believe how they save Muslim people?
— shah Nizaamudeen (@SNizaamudeen) February 27, 2020
Fail @ArvindKejriwal #DelhiBurning #DelhiGenocide2020 #DelhiCAAViolence #BanRSS pic.twitter.com/l5XeywwR2q
This is how Tahir Hussain and his goons orchestrated and executed the #DelhiRiots2020
— Satish_Kumar (@Satishbjpit4up) February 26, 2020
The murder of IB Officer Ankit Sharma should make CM Arvind Kejriwal's head hang in Shame! #AAP_के_आतंकी #ArrestTahirHussain #DelhiRiots #DangeKaSachOnZee #TahirHussain #Arrest_Sonia_Gandhi pic.twitter.com/406FRsqShd
பிப்ரவரி 24 முதல் இந்த துயர சம்பவங்களில் 35 பேர் உயிர் இழந்துள்ளனர். மோதல்கள், உயிர் இழப்பு, சொத்து இழப்பு போன்ற போன்ற காரணங்களுக்காக இதுவரை 48 எஃப்.ஐ.ஆர் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 514 சந்தேக நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையின் போது மேலும் கைது எண்ணிக்கை அதிகரிக்கும்.
கடுமையான குற்றங்களை விசாரிக்க டெல்லி காவல்துறை தனித்தனியாக இரண்டு சிறப்பு புலணாய்வு குழுக்களை அமைத்துள்ளது.
பிப்ரவரி 24 முதல் வடகிழக்கு மாவட்டத்தின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 7,000 மத்திய இராணுவப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. தவிர, டெல்லி காவல்துறையினர் மூன்று சிறப்பு குழுக்கள், ஆறு கூட்டு குழுக்கள், ஒரு கூடுதல் சிபி, 22 டிசிபிக்கள், 20 ஏசிபிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள், போலிஸ் கமிஷனரின் ஒட்டுமொத்த மேற்பார்வையின் கீழ் 1,200 மற்ற அணிகளும், மேலும், 200 பெண் போலிஸாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
கலவரத்தின்போது சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக இரண்டு பாதுகாப்புப் பணியாளர்கள் பணியின் போது பலியாகியுள்ளனர். தவிர, இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களில் கிட்டத்தட்ட 70 காவல்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவியை உறுதி செய்ய போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரிடையே நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கையாக, தில்லி காவல்துறை நிலைமையை சீராக்க மற்றும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்காக டெல்லி முழுவதும் அமைதிக் குழு கூட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளது. இத்தகைய அமைதிக் குழு கூட்டங்கள் நிலைமை இயல்பாகும் வரை தொடரும். இதுவரை, டெல்லியின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களில் கிட்டத்தட்ட 330 அமைதிக் குழு கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இது தவிர, குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்கள் மற்றும் சந்தை நலச் சங்கங்கள் ஆகியவற்றுடன் பல பகுதிகளிலும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. சிவில் சொசைட்டி குழுக்கள், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட சமூகத்தின் பல்வேறு குழுக்கள் இத்தகைய அமைதிக்குழு கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளன.
ஏற்கனவே கலகத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிகளை சுத்தம் செய்வதற்கும், சேதமடைந்த பொது சொத்துக்களை சரிசெய்வதற்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிற குடிமை நிறுவனங்களும், குடிமக்களுக்கான குடிமை வசதிகள் விரைவில் மீட்கப்படுவதை உறுதி செய்கின்றன. நெடுஞ்சாலையில் போக்குவரத்து மற்றும் சாலைகளை இணைக்கும் பணி நடைப்பெற்று வருகிறது.
दंगा प्रभावित लोगों को सहायता पहुँचाने का कार्य पूरी तेज़ी से शुरू कर दियादंगा प्रभावित लोगों को सहायता पहुँचाने का कार्य पूरी तेज़ी से शुरू कर दिया
Posted by Arvind Kejriwal on Friday, 28 February 2020
இந்நிலையில், டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை தெரிவித்துள்ளார்.
ஆம், கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை மெல்ல, மெல்ல திரும்புகிறது.
-எஸ்.சதிஸ் சர்மா.
ullatchithagaval@gmail.com
