“கடந்த காலத்தை விட்டுவிட்டு, நிகழ்காலத்தில் வாழ்வோம்” திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் ஆதரவற்ற முதியோர்களுக்கு தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி துறை மாணவி லியா கவுரி என்பவரின் ஒருங்கிணைப்பில், திருச்சி புத்தூர் சாந்தி வில்லா ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லத்தில் “கடந்த காலத்தை விட்டுவிட்டு, நிகழ்காலத்தில் வாழ்வோம்” என்ற தலைப்பில் தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சாந்தி வில்லா ஆதரவற்ற முதியோர் இல்ல இயக்குநர் சகோதரி மரியம் தெரசு, பிஷப் ஹீபர் கல்லூரி மாணவ கவுன்சிலர் ஆர்.எம்.தேவசேனாபிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி துறை உதவி பேராசிரியர் எம்.ரீனா ரெபெல்லோ ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

-அ.வனிதா.

 

 

One Response

  1. MANIMARAN February 24, 2020 5:08 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply