தண்ணீரின்றி தவிக்கும் கிராம மக்கள்! – அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள்!

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், பிச்சாண்டார்கோயில் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை குடி தண்ணீருக்காக கை ஏந்த வைக்கும் ஊராட்சிமன்ற நிர்வாகிகள். பிச்சாண்டார்கோவில் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் இரயில்வே துறை தரைப்பாலம் பணிகள் கடந்த 15 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. தரைப்பாலம் பணிகள் முடிவடைய மூன்று  மாதம் ஆகும் என்கிறார்கள் அதிகாரிகள். இதனை காரணம் காட்டி குடிதண்ணீர் தர மறுக்கிறார்கள் பிச்சாண்டார்கோயில் ஊராட்சிமன்ற நிர்வாக அதிகாரிகள்.

இதுபற்றி, அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் பொறுப்பைத்தட்டிக்களிக்கும் விதமாக தரைப்பாலம் பணிகள் முழுமையாக முடிந்தால் மட்டுமே குடிதண்ணீர் இணைப்பு கொடுக்கமுடியும் என்று கூறுகிறார்கள். மேலும், அம்மா அழைப்பு மைய அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை கொடுத்து புகாரை முடித்துவைத்திருக்கிறார்கள். தகுந்த நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை ஊராட்சிமன்ற நிர்வாகிகள் தீர்க்க வேண்டும் என்று பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

– கே.பி.சுகுமார்.

Leave a Reply