திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் (சென்ரல் டாக்கீஸ்) ராமகிருஷ்ணா மில் அருகே விஜயரகு என்பவர் ஒரு கும்பலால் இன்று காலை வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த விஜயரகு திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனால் அப்பகுதி முழுவதும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
விஜயரகு
படுகொலை செய்யப்பட்ட விஜயரகு பா.ஜ.க.வை சேர்ந்தவர் என்பதால், பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அப்பகுதியில் குவிந்துள்ளனர். இதனால் பாலக்கரை, காந்தி மார்கெட், பெரியகடைவீதி ஆகிய பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, கொலை செய்த கும்பலை தேடிவருகின்றனர்.
5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும், திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
–டாக்டர் துரை பெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

City yil ivvaru nadanthathu, vedhanaikkuriya visayam.