விவசாயிகளின் விழிப்புணர்வு பேரணி ஏற்காட்டில் நடைப்பெற்றது!

சேலம் மாவட்டம், ஏற்காடு, பெலாக்காடு கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில், சிறுதானிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விவசாயிகளின் பேரணி நடைப்பெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் ரமேஷ் தலைமையில், பெலாக்காடு கிராம மந்தையில் துவங்கிய பேரணி கிராமத்தில் வீடுகள் உள்ள பகுதிகள் வழியாக ஊர்வமாக சென்று துவங்கிய இடத்திலேயே நிறைவடைந்தது.

பேரணி துவங்கும் முன்பு ராகி, சாமை, திணை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துகள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இப்பேரணியில் உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார், அய்யந்துரை மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் சதீஸ் குமார், துரை அரசு மற்றும் கேளையூர், மாரமங்களம், அரங்கம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் பங்கேற்றனர்.

-நே.நவீன் குமார்.

 

One Response

  1. MANIMARAN November 27, 2019 4:25 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply