மணப்பாறை அருகே கஞ்சா விற்ற பெண் குண்டர் சட்டத்தில் கைது!

கஞ்சா வியாபாரி மகாலெட்சுமி.

மூன்று தலைமுறையாக கஞ்சா விற்பனை செய்யும் குடும்பத்தில் வழிவந்த கஞ்சா வியாபாரி மகாலெட்சுமி என்ற பெண், இன்று அதிரடியாக (தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்) குண்டர் சட்டத்தில் (CRMP 62/2019, TPDA 1056) கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மோர்குளம் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரின் மனைவி மகாலெட்சுமி, இவர் பரம்பரையாக கஞ்சா விற்பனை செய்வதேயே தொழிலாக கொண்ட குடும்பத்தில் வழிவந்தவர். இவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், மணப்பாறை காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் தலைமையிலான போலிசார் இவரை அதிரடியாக  கைது செய்தனர்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரையை ஏற்று, நீதிபதி உத்தரவின் பேரில், கஞ்சா வியாபாரி மகாலெட்சுமி (தமிழ்நாடு வன்செயல்கள் தடுப்புச் சட்டம்) குண்டர் சட்டத்தில் திருச்சி பெண்கள் சிறையில் இன்று (04.10.2019)அடைக்கப்பட்டார்.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com.

2 Comments

  1. குமார் October 4, 2019 7:16 pm
  2. MANIMARAN October 5, 2019 11:09 am

Leave a Reply to MANIMARAN Cancel reply