தண்ணீரில் தத்தளிக்கும் கர்நாடகா!

தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் மாநிலத்தின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

பாதிக்கப்பட்ட மக்களை கர்நாடகா மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா நேரில் சந்தித்து ஆறுதல் கூறிவருகிறார்.  இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு கர்நாடகா மாநில முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தண்ணீரில் தத்தளித்தாலும், கண்ணீரில் தத்தளித்தாலும் தமிழ்நாட்டுக்கு மட்டும் தண்ணீர் கொடுக்கமாட்டோம் என்பதில் கர்நாடக ஆட்சியாளார்கள் இன்று வரை உறுதியாக இருக்கிறார்கள்.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN August 9, 2019 2:19 pm

Leave a Reply