துவாக்குடி பேருந்து நிலையத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து முன்பு 2 நபர்கள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பேருந்தை எடுக்க நினைத்த ஓட்டுனர், இருசக்கர வாகனத்தை நகர்த்த சொன்னார். இதனால் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் இருசக்கர வாகனத்தை நகர்த்தாமல், அந்த இருநபர்களும் தனியார் பேருந்து ஓட்டுனர், நடத்துனரை இரும்பு கம்பியால் அடித்ததோடு, பேருந்து கண்ணாடியையும் அடித்து உடைத்துள்ளனர்.
தாக்குதலில் ஈடுப்பட்ட நபர்.
இச்சம்பவம் குறித்து பேருந்து நடத்துனர் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததையடுத்து, தாக்குதலில் ஈடுப்பட்ட இரண்டு நபர்களில் ஒருவரை கைது செய்த துவாக்குடி போலிசார், தலைமறைவான மற்றொரு நபரை தேடிவருகின்றனர். பலத்த காயமடைந்த ஓட்டுனர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
-கே.பி.சுகுமார்.
