தேர்தல் நடத்தை விதி மீறல்கள் cVigil செயலி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தேர்தல் நடத்தை விதி மீறலை ஆயிரம் கண்கள் (கேமராக்கள்) கண்காணிக்கிறது என்பதை கட்சியினர், வேட்பாளர் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இதற்காக ‘சி-விஜில்’ செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஓட்டுக்கு பணம், பரிசு கூப்பன், பொருள், மதுபானம் வழங்குதல், அனுமதியின்றி பேனர், போஸ்டர் ஒட்டுதல், பொது சொத்தை சேதம் செய்தல்,ஓட்டுப்பதிவன்று வாக்காளர்களை வாகனத்தில் அழைத்து செல்லுதல், ஓட்டுச்சாவடி உள்ள இடத்தில் இருந்து 200 மீட்டருக்குள் ஓட்டு சேகரித்தல், அனுமதித்த நேரம் தவிர்த்து மற்ற நேரத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துதல், ஓட்டு சேகரிப்புக்கு செல்லும் போது மக்களை அழைத்து செல்லுதல் போன்ற தேர்தல் நடத்தை விதிமீறல்களை படமாகவோ, வீடியோவாகவோ எடுத்து நேரடியாக இந்த ‘செயலிக்கு’ அனுப்புங்கள். இந்த தகவல்கள் அனைத்தும் சட்டசபை வாரியாக நியமித்துள்ள பறக்கும் படை அதிகாரி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலைபேசிக்கு சென்றுவிடும்.

திவாஹர்

Leave a Reply