அசாம் மாநிலத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது தேர்தல் ஆணையம்.

மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோளை அடுத்து, 1950-ம் ஆண்டில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 8(A) பிரிவின்படி அசாம் மாநிலத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் முயற்சிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு அனுப் சந்திர பாண்டே, திரு அருண்கோயல் ஆகியோரைக் கொண்ட தேர்தல் ஆணையம் அசாம் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு, 2023 ஜனவரி முதல் தேதியில் இருந்து புதிய நிர்வாக அலகுகளை உருவாக்க முழுத் தடை விதிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மறுவரையறை நடைமுறை முடியும் வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும். அரசியல் சாசனத்தில் 170-வது பிரிவின் கீழ் 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டியது அவசியமாகும்.  ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு அரசியல் சாசனப்பிரிவு 330 மற்றும் 332-ன் அடிப்படையில் தொகுதிகள் ஒதுக்கப்படும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply