இலங்கைக் கடற்பரப்பில் 24 இந்திய மீனவர்கள் கைது!-தொடரும் துயரங்கள்..!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் 5 படகையும், மீன்பிடி உபகரணங்களையும் மற்றும் அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இச்சம்பவம் நவம்பர் 28 ஆம் தேதி மாலை இலங்கை கடற்பரப்பில், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பால், காரைநகர், யாழ்ப்பாணம் கடற்பகுதியில் நடந்துள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், அதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பதும், அவர்களை விடுதலை செய்யும்படி இந்திய அரசுக்கு, தமிழக அரசின் சார்பில் கோரிக்கை வைப்பதும், கடிதங்கள் எழுதுவதும் பல தசாப்தங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இப்பிரச்சனைக்கு இன்று வரை முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.

எல்லை தாண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களை கண்காணித்து தடுக்க வேண்டிய இந்திய கடற்படையும், இந்திய கடலோர காவல் படையும் அங்கு என்ன தான் செய்து கொண்டிருக்கிறது?!

இந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 252 இந்திய மீனவர்களையும், 35 படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதற்கு ஒரே தீர்வு; அரசியல் ஆதாயம் கருதியாவது கச்சத்தீவை மீட்பதற்கு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

இதுத்தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.

https://www.ullatchithagaval.com/2022/03/26/70349/

One Response

  1. Tamilselvam December 1, 2022 8:15 pm

Leave a Reply