நேரடிப் பலன் பரிமாற்றம் அரசின் மிகப்பெரிய சாதனை, இடைத்தரகர்களின் பிடியிலிருந்து மக்களை விடுவித்தது!- முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு.

பிரதமரின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளின் தொகுப்பான சப்கா சாத் சப்கா விகாஸ் சப்கா விஸ்வாஸ் என்னும் புத்தகத்தை, கேரள ஆளுநர் திரு ஆரிப் முகமது கான் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் தாக்கூர் ஆகியோருடன் இணைந்து முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு, வெளியீட்டுப் பிரிவு இயக்குநரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் இன்று வெளியிட்டார். இந்த புத்தகம் மே 2019 முதல் மே 2020 வரை பல்வேறு தலைப்புகளில் பிரதமர் ஆற்றிய 86 உரைகளின் தொகுப்பாகும்.

இந்நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர், தேசம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றைச் சமாளிப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் பற்றிய புரிதலை விரிவுபடுத்துவதற்கு இந்த புத்தகம் குறிப்பிடத்தக்க பங்களிப்பாக உள்ளது என்றார். தற்போதைய அரசு அனைவரும் நலம் காண வேண்டும் என்ற பொருள்படும் ‘சர்வே ஜன சுகினோ பவந்து’ என்ற பரந்த தத்துவத்தின் கீழ் செயல்படுவதாக அவர் கூறினார். முன்னரும் நல்ல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன என்றும், ஆனால் தற்போதைய பிரதமர் மட்டுமே முன்னோடியாக இருந்து அனைத்து திட்டங்களுக்கும் காலக்கெடுவுடன் இலக்குகளை நிர்ணயித்து, கண்காணித்து உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார். மகத்தான தகவல் தொடர்புத் திறனைக் கொண்டுள்ள பிரதமர் மோடியால் நாட்டு மக்கள் அனைவரையும் ஒரே மாதிரியாக இணைக்க முடியும் என்று திரு நாயுடு கூறினார்.

கோடிக்கணக்கான வங்கிக் கணக்குகளைத் திறக்கும் தொலைநோக்குப் பார்வை எட்ட முடியாததாகத் தோன்றினாலும், பிரதமர் மோடியின் திறமையான தலைமையின் கீழ், அந்த இலக்கை மிக விரைவாக எட்டியதை திரு நாயுடு நினைவு கூர்ந்தார். நேரடிப் பலன் பரிமாற்றத்தை அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாகக் கருதும் திரு நாயுடு, இடைத்தரகர்களின் பிணைப்பிலிருந்து மக்களை விடுவித்து, நலத்திட்ட  நடவடிக்கைகளின் இறுதிப் புள்ளியை உறுதி செய்வதாகக் கூறினார். முன்னர் அரசு அல்லது அரசியல் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டபோது, இலக்கை அடைவது மக்களின் ஈடுபாட்டைப் பொறுத்தது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொண்டார். தூய்மை இந்தியா மக்கள் இயக்கமாக பிரதமரால் உறுதி  செய்யப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கேரள மாநில ஆளுநர் திரு ஆரிப் முகமது கான், புத்தகத்தில் ஒரு பொதுவான தொடர்பு நூல் இயங்குகிறது என்றும், அதுவே ஒதுக்கப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் பிரதமரின் அக்கறை என்றும் கூறியுள்ளார். கழிவறைகள் மற்றும் தண்ணீர் இணைப்பு கிடைப்பது போன்ற இரட்டைப் பிரச்சினைகளுக்கு அரசுத் தலையீடு மிக நீண்ட காலமாகத் தேவைப்பட்டது, ஆனால் பல அரசுகள் வந்து சென்றாலும், இப்போதைய அரசுதான் இந்தப் பணியை ஆரம்பம் முதலே போர்க்கால அடிப்படையில் முன்னெடுத்தது என்றார் அவர்.

முத்தலாக் குறித்து பேசிய அவர், பல நூற்றாண்டுகளாக தழைத்தோங்கி வரும் இந்த தீமையை ஒழிப்பது சிறிய சாதனையல்ல. இது ஏமாற்றமளிக்கும் வகையில், திருமணமான முஸ்லீம் பெண்கள் தொடர்ந்து விவாகரத்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகினர். அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தனது மிகப் பெரிய தோல்வியாகக் கருதிய இதனை வெற்றியாக பிரதமர் மோடி மாற்றிக்காட்டினார். பிரதமர் நரேந்திர மோடி முஸ்லிம் பெண்களின் விடுதலையாளராக நினைவுகூரப்படுவார் என அவர் தெரிவித்தார். அனைத்து முரண்பாடுகளையும் எதிர்ப்பையும் தைரியமாகச் சமாளித்து இந்த வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக பிரதமருக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

புத்தகத்தைப் பற்றி பேசிய மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், இந்தப் புத்தகம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் 86 உரைகளை 10 அத்தியாயங்களில் தொகுத்துள்ளது என்றும், சிக்கலான சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய அவரது ஆழமான புரிதலையும் அவரது தெளிவான பார்வையையும் விளக்குவதாகவும் குறிப்பிட்டார். எதிர்கால வரலாற்றாசிரியர்களுக்கு இந்த தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் அவர்.

இந்த உரைகளில், சிக்கலான தேசிய பிரச்சினைகளில் அவரது எண்ணங்களையும் அவரது தலைமையையும் ஒருவர் காணலாம், இதன் விளைவாக இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக நிற்கிறது. இடைத்தரகர்கள் இல்லாத, கடைசி மைல் டெலிவரிக்கு சேவை செய்வதிலும் உறுதி செய்வதிலும் அவரது ஆர்வத்துடன் இந்தச் செயல்கள் தான், மக்கள் அவர் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என அமைச்சர் தெரிவித்தார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply