காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும், தற்போது அறிவித்துள்ள தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

November 18, 2004- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

November 18, 2004- அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!

18 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும், தற்போது கலந்து, ஆலோசித்து தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருமணமாகி 18 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்துள்ளார்.

18 ஆண்டுகளாக நண்பர்களாக, துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம். தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவும் இதே அறிவிப்பை வெளியிட்டு பிரிவை உறுதி செய்துள்ளார்.

இவர்களின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் பொதுவெளியில் பகிரங்கமாக சொல்ல முடியாத பல காரணங்கள் இருக்கலாம்!-அதை இங்கு யாரும் மறுப்பதற்கு இல்லை.

இந்த உலகத்தில் யாருக்கு தான் பிரச்சனை இல்லை?! நாம் ஏண்டா பிறந்தோம்!-நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டங்கள் வருகிறது?!-இப்போது இருக்கிற புத்தி பத்து வருடங்களுக்கு முன்பு இருந்திருந்தா?!-இப்படி நினைக்காத; புலம்பாத மனிதர்கள் இந்த உலகத்தில் யாருமே இல்லை!

ஏனென்றால்,

வாழ்ந்து விடலாம் என்று சொல்லுமளவிற்கு வாழ்க்கை அவ்வளவு எளிமையானது அல்ல!- வாழவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு வாழ்க்கை அவ்வளவு கடினமானதும் அல்ல!-புரிந்து கொண்டால் வாழ்க்கை புனிதமானது.அந்த புரிதல் பிரிந்து வாழ்வதில் நிச்சயம் கிடைக்காது!

வில்லில் இருந்து விடுபட்ட அம்பு! வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை! கடந்துபோன காலம்! பட்ட அவமானம்! இழந்த நிம்மதி!- இவற்றையெல்லாம் நினைத்து, நினைத்து வருந்துவது; மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்புவதற்கு சமம்.

மறக்க வேண்டியதை நினைவில் கொள்வதும்; நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியதை மறந்து விடுவதும்! நம்பக் கூடாதவர்களை நம்புவதும்; நம்பிக்கைக்கு உரியவர்களை சந்தேகப்படுவதும் துன்பத்தைதான் உண்டாகும்.

காதல், திருமணபந்தம், தாம்பத்தியம், பரிசுத்தம், சந்தோசம், நிம்மதி, பக்குவம், பரந்த மனப்பான்மை, தியாகம் இவையெல்லாம் உடல் சார்ந்த விஷயம் அல்ல!-மாறாக மனம் சார்ந்த மகத்துவம்!-மொத்தத்தில் இது ஒரு தவம்!-அது அவ்வளவு எளிதில் அனைவருக்கும் கைகூடி விடாது.

எனவே, கற்பு எனப்படுவது யாதெனில், சொன்ன சொல் தவறாமல் நடப்பது என்பதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அறிவினால் உணர்ந்துகொள்ள வேண்டும்!- இல்லையென்றால், அனுபவம்தான் உணர்த்தும்!

எனவே, நெருப்புக்கு பயந்து; எரியும் அடுப்புக்குள் விழுந்த நிகழ்வாக தங்கள் இருவரது முடிவும் இருந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தான் இதை நான் இங்கு குறிப்பிட்டு உள்ளேன்.

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், ங்களை வழிகாட்டியாக கருதி வாழ்ந்து வரும் இலட்சக்கணக்கான ரசிகர்களின் கள்ளம், கபடமில்லா நம்பிக்கையை கருத்தில் கொண்டும், குறிப்பாக இரு குடும்பத்தாரின் வயது முதிர்ந்த பெற்றோர்களின் நிம்மதியை கருத்தில் கொண்டும்; நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் தற்போது எடுத்துள்ள இந்த முடிவை கட்டாயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

“இருப்பதை விட்டுவிட்டு இருவரும் தனித்தனியே பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம்”-என்பதுதான் எனது அன்பான வேண்டுகோள்!

இதுக்கு அப்புறம் உங்கள் விருப்பம்...!

என்றும் தோழமையுடன்,

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

Leave a Reply