மக்களவை பொதுத் தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும்! -முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடைபெறும்!- இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!-முழு விபரம்.

Sunil-Arora, Chief Election Commissioner.

இரண்டாவது கட்டமாக வாக்கு பதிவு நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாகும். அதன்படி  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும்.

வேட்புமனுத் தாக்கல் மார்ச் 19 தேதி தொடங்கும்

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26-ம் தேதி

வேட்பு மனு பரிசீலனை: மார்ச் 27-ம் தேதி

மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: மார்ச் 29-ம் தேதி

வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி

வாக்கு எண்ணிக்கை மே 23-ம் தேதி நடைபெறும்

தமிழகத்தில் I8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல்:

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் I8 தொகுதிகளுக்கு மட்டும் இடைத் தேர்தல் நடைபெறும். திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு இடைத் தேர்தல் இப்போது கிடையாது.

மீதமுள்ள பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய I8 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply