இந்தியாவில் மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி வந்தால் வரவேற்பேன்!- மகாத்மா காந்தி தனிச் செயலர் கல்யாணம் குமுறல்.

மகாத்மா காந்தி 150 –வது பிறந்த நாளை முன்னிட்டு, அகிம்சையை வலியுறுத்தி அண்ணல் காந்தியடிகள் தபால் தலை கண்காட்சி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

இதில் மதன், லால்குடி விஜயகுமார், மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் மகாத்மா காந்தி அஞ்சல் தலைகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.

சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த மகாத்மா காந்தி தனிச் செயலர் வெ.கல்யாணம், காந்தியடிகள் எழுதிய கடிதம், திருத்திய கடிதங்களையும் காட்சிப்படுத்தி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.

காந்தி ஆஸ்ரமத்தில் அதிகாலை எழுந்து பிரார்த்தனை நடைபெறும். காந்திக்கு வரும் கடிதங்களை வாசிக்க சொல்வார். அகற்கான பதில் கடிதம் எழுதும்  போது திருத்தங்களை கூறுவார். பின்னர் திருத்துவார். யாரையும் கடிந்து பேச மாட்டார். திங்கட்கிழமை தோறும் மெளன விரதம் இருப்பார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 6 முறை காந்தியை கொல்ல முயற்சி நடைபெற்றது. ஆனால், சுதந்திரம் பெற்ற ஆறாவது மாதத்திலேயே காந்தியை நாம் இழந்தோம்.

ஆங்கிலேயர் காலத்தில் லஞ்சம், லாவண்யம் கிடையாது. மீண்டும் ஆங்கிலேயர் ஆட்சி காலம் வந்தால் வரவேற்பேன்.

நேதாஜி ஆட்சி முறை அமைந்திருந்தால் நாட்டின் தலையெழுத்தே மாறியிருக்கும். ஜெனரல் கரியப்பாவும் இதே கருத்தை கொண்டிருந்தார் என்றார்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியர்களின் அட்டூழியங்கள் என சிவப்பு வண்ணத்தில் Atrocities in Indian occupied kashmir என வெள்ளை எழுத்துக்களால் அச்சிடப்பட்டு பாகிஸ்தான் தபால் தலையினை 13 ஜூலை 2018ல் 20 தபால் தலைகளை வெளியிட்டுள்ளது. 

1 வரிசைக்கு 5 தபால் தலைகள் வீதம் 4 வரிசையில் 20 தபால் தலைகள் கொண்ட நினைவார்த்த தபால் தலைகள் கொண்ட ஒரு தாளாக வெளிவந்துள்ளது. ஒவ்வொரு தபால் தலையும் உள்ளுர் மதிப்பில் ரூ 8 மதிப்புடையதாகும். 20 தபால் தலைகள் $6.99 சுமார் ரூ 500 மதிப்பாகும். தபால் தலை இடதுபுறம் ஒவ்வொரு தபால் தலையிலும் ஒவ்வொரு தலைப்பு இடம் பெற்றுள்ளது.

ரசாயண  ஆயுதங்களை பயன்படுத்துதல், விதவைகள், குழந்தைகள் துஷ்பிரயோகம், போலி என்கவுண்டர், சுதந்திரத்திற்கான பிரார்த்தனை, துளைக்கும் துப்பாக்கிகளை பயன்படுத்துதல், பெண்களை துன்புறுத்துதல், காணாமல் போனவர்கள், வெகுஜனத்தின் கல்லறைகள், ஒரு லட்சம் காஷ்மீரிகளின் உயிர் தியாகம், பர்கான் வானி 1994-2016 சுதந்திர சின்னம்,காஷ்மீரில் ரத்தம் வடிதல், கொலையாளிகளிடம் இருந்து பாதுகாத்தல், பின்னல் வெட்டுதல், வீடற்ற குழந்தைகள், சுதந்திர போராட்டம், மிருகத்தனம், பெண்களை சித்ரவதை செய்தல் என ஆங்கிலத்தில் மஞ்சள் வண்ணத்தில் எழுத்தும் தலைப்பிற்கேற்ற புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.

தபால் தலைகள் இடது மேற்புறம் பாகிஸ்தான் எனவும் Rs 8 எனவும் அச்சிடப்பட்டுள்ளது. நேஷனல் செக்யூரிட்டி பிரிண்டிங் கம்பெனி என தபால் தாள் கீழே அச்சிடப்பட்டுள்ளது. இத் தபால் தலை இ-பே மற்றும் பிற வர்த்தக வலைதள நிறுவனத்தில் விற்கப்படுகிறது. 

ஒரு நாட்டின் அஞ்சல் தலையானது அந்நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பண்பாடு, அறிவியல், கண்டுபிடிப்பு என அமையும். ஆனால், இத்தபால் தலை அண்டை நாடான இந்தியாவின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது. இத்தபால் தலையின் உண்மை தன்மையினை ஆராய்ந்து பாகிஸ்தான் வெளியிட்டுள்ள தபால் தலையினை திரும்பப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மகாத்மா காந்தி 150-வது பிறந்த நாளை முன்னிட்டு 150 இடங்களில் இலவசமாக மகாத்மா காந்தி அஞ்சல் தலை கண்காட்சி நடத்தி காந்திய சிந்தனைகளை எடுத்துரைத்து வரும், மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் கேட்டு கொண்டுள்ளனர்.

மகாத்மா காந்தியடிகள் 150-வது பிறந்த நாளையொட்டி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள காந்தி திருவுருவ சிலைக்கு சுதந்திரப் போராட்ட தியாகியும், காந்தி தனிச் செயலருமாகிய வெ.கல்யாணம், வரலாற்று ஆய்வாளர் குமார், லால்குடி விஜயகுமார், மதுரை அருங்காட்சியக காப்பாட்சியர் பெரியசாமி, மதுரை அஞ்சல் தலை சேகரிப்பாளர் மதன், யோகாசிரியர் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

-கே.பி.சுகுமார்.

Leave a Reply