உடல் நலம் பாதிக்கப்பட்ட மீனவரை, காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை குடவெல்ல மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவருக்கு, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுக்குறித்து இலங்கை கடற்தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலங்கை கடற்படை வீரர்கள், மீன் பிடிப் படகில் இருந்து நோயாளியை மீட்டு, கடற்படை கப்பல் மூலம் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து, அம்பாந்தோட்டை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

-என்.வசந்த ராகவன்.

ஒடிசா, ஆந்திரா மற்றும் சண்டிஹர் மாநிலங்களுக்கு புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை!-மத்திய நீர்வள ஆணையம் அறிவிப்பு.
காவலர் நிறைவாழ்வு பயிற்சி துவக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி ஆற்றிய உரை!-முழு விபரம்.

Leave a Reply