கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக மின்சார சர்க்யூட் பலகையை திருச்சி என்.ஐ. டி. வழங்கியது.

கேரள வெள்ள நிவாரண ஊக்கத்தொகையின் ஒரு பகுதியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக மின்சார சர்க்யூட் பலகையை திருச்சி என்.ஐ. டி. வழங்கியது.

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு தனித்துவமான உதவியை திருச்சி NIT வழங்குகிறது. IEEE கேரளாவின் அழைப்புக்கு கரம் கொடுக்கும் வகையில் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளுக்கு தற்காலிக மின்சார சர்க்யூட் பலகையை வடிவமைத்து கேரளா மக்கள் இல்லம் ஒளி பெற மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவர் சங்கத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்கின்றனர்.

ஆகஸ்ட் மாதத்தில் கேரளாவின் ஏற்பட்ட பேரழிவு வெள்ளம், மனித உயிர்களையும் சொத்துக்களையும் அடித்து சென்றது.

மறுவாழ்வு ஆரம்ப கட்டத்தில், காணப்பட்ட முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மின் மறுசீரமைப்பு சிக்கல்கள். நீரில் மூழ்கியிருந்த பல அடுக்கு மாடி வீடுகளில் இருக்கும் wiring சேதமடைந்தன மற்றும் மின்சார இணைப்பு மீண்டும் புதுப்பிக்கப்படுவதற்கு முன்பே முழுமையான சீரமைப்பு வேண்டும். இதற்க்கு தொழில் நுட்ப வல்லுநர்கள், நேரம் மற்றும் பணம் தேவை என்பதை உணர்த்த IEEE கேரளா அமைப்பு தற்காலிக மின் சீரமைக்கும் பணியை ஜல ஜோதி திட்டத்தை அறிமுகம் செய்தது.

முதல் கட்டமாக நீரில் மூழ்கிய 500 வீடுகளுக்கு கேரளா மின்சார துறையின் அனுமதியோடு தற்காலிக மின்சார சர்க்யூட் பலகை வழங்கி ஒளிர்ப்பெற செய்தது. அதை தொடர்ந்து அவர்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் இந்தியாவில் தொழில்நுட்ப துறையில் சிறந்து விளங்கும் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சிராப்பள்ளியில் இயக்குனர் டக்டர் மினி ஷாஜி தாமஸ் தனது மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உதவியோடு திருச்சிராப்பள்ளியும். கேரளா IEEE அமைப்போடு இணைந்தது. தற்காலிக விநியோக வாரியத்தின் ஒப்புதலுக்கான வடிவமைப்பு மற்றும் குழுவின் கட்டமைப்பிற்கான பிரிவு, சஜிஸ் எலக்ட்ரிகல்ஸ், ஜெயராம் சதாசிவம் ஆகியோரால் நிறுவப்பட்ட NIT திருச்சி முன்னாள் மாணவர் ஒருவர் தொடர்பு கொண்டு, உடனடியாக உதவி செய்ய ஒப்புக்கொண்டார். என் ஐ டி மாணவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரூபாய் 5,32,000 வழங்கினர்.

அதோடு முன்னாள் மாணவர் அமைப்பு ரூபாய் 2 லட்சம் தருவதாக ஒப்புக்கொண்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், பணம் கொடுப்பது மட்டும் அல்லது மாணவர்கள் அந்த தற்காலிக மின்பலகை செய்வதற்கும் IEEE பெங்களூரு இயக்குனர் அமர்நாத் ராஜா மற்றும் பேராசிரியர் பக்தவாச்சலம் ஆகியோரோடு இணைத்து திறம்பட செயல்பட்டனர்.

7 செப்டம்பர் 2018 அன்று நடைபெற்ற பெண்களுக்கான பொறியியல் சர்வதேச தலைமைத்துவ உச்சி மாநாட்டில் மாணவர்களால் தயார் செய்யப்பட்ட தற்காலிக மின் பலகை IEEE கேரளா தலைவர் பேராசிரியர் சமீர்ரிடம், டாக்டர் மினி தாமஸ் முதல் பலகையை வழங்கினார்.

மேலும், 500-க்கும் மேற்பட்ட மின் பலகைகள் NIT மாணவர்கள் மற்றும் சஜஸ் எலக்ட்ரிகல் துணையோடு உருவாக்கப்பட்டுள்ளது. இது விரைவில் கேரளா மக்களுக்கு அனுப்பப்படும்.

திருச்சியின் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் முன்வந்து கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 10,09,514 காண காசோலையை எர்ணாகுளம் மாவட்ட ஆட்சியர் சபிருல்லாஹ்-விடம் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் வழங்கினார்.

-ஆர்.சிராசுதீன்.

உடலில் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் வாய்க்காலில் மிதந்த மினி வேன் டிரைவர்!- திருச்சி நவல்பட்டு போலீசார் விசாரணை.
அமெரிக்காவில் வேட்டி சட்டையில் வலம் வரும் இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு!

Leave a Reply