இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானர்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை காலமானர். வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் கடந்த 35 நாட்களுக்கும் மேலாக இந்தியாவின் தலைநகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் இன்று 16.08.2018 மாலை சுமார் 05.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவருக்கு வயது 93. அவரது மறைவிற்கு  கட்சி பாகுபாடின்றி பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் (17.08.2018) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களுக்கு “அரசு பொது விடுமுறை “  அறிவித்துள்ளது.

-கே.பி.சுகுமார்.

மழை மற்றும் வெள்ள அபாய எச்சரிக்கை !-நீர் வளத்துறை ஆணையத்தின் அறிக்கை.
காவிரியில் வெள்ளப்பெருக்கு..!-திருச்சி பனையக்குறிச்சி அருகே கால்வாய் மதகில் தண்ணீர் கசிவு!- முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் திருவெறும்பூர் வட்டாட்சியர்.

Leave a Reply