வெந்து தணிந்தது காடு! -இலங்கையில் தேக்குமர காட்டில் திடீர் தீ விபத்து.

இலங்கை, வட மத்திய மாகாணத்தில், அனுராதபுர மாவட்டத்தில், அனுராதபுரத்தில் இருந்து 27 கி.மீ. தொலைவில் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான சாலையில் அமைந்துள்ள மெதவச்சியா பகுதியில், வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தேக்குமர காட்டில், நேற்று திடீரென தீ பற்றி எரிந்தது.

வனத்துறை அமைச்சகத்தில் இருந்து, இலங்கை வட மத்திய கடற்படைத் தலைமையகத்திற்கு வந்த தகவலையடுத்து, உடனடியாக 02 அதிகாரிகள் தலைமையில், 37 மாலுமிகள் கொண்ட கடற்படை தீயணைக்கும் குழு, மெதவச்சியா வனப்பகுதிக்கு விரைந்தது.

கடுமையாக போராடி தீயை அணைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதற்குள் அப்பகுதி முழுவதும் தீயில் எரிந்து கருகியது.

-என்.வசந்த ராகவன்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்- II தேர்வுக்கான அறிவிப்பு!-முழு விபரம்.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!- மத்திய நீர்வள ஆணையம் அறிவிப்பு

Leave a Reply