படகு இயந்திர கோளாறு காரணமாக கடலில் தத்தளித்த 5 மீனவர்களை காப்பாற்றி கரைச் சேர்த்த இலங்கை கடற்படையினர்!

இலங்கை திருகோணமலை மீன்பிடி துறைமுகத்திலிருந்து 26 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்த படகு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக நிலைத்தடுமாறியது. இதனால் அந்த படகில் இருந்த 5 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலங்கை வடக்கு கடற்படையினர், கடலில் தத்தளித்து கொண்டிருந்த 5 மீனவர்களையும், நிலைத்தடுமாறி மூழ்கும் தருவாயில் இருந்த படகையும் மீட்டு காங்கேசன் துறை துறைமுக வளாகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வந்து கரை சேர்த்தனர்.

அதன் பின்னர் அந்த 5 மீனவர்களும், அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

-என்.வசந்த ராகவன்.

அணைகள் பாதுகாப்பு மசோதா! -மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் வகையில் உள்ளது : பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி கடிதம்.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது!-உயர் நீதிமன்ற உத்தரவின் உண்மை நகல்.

Leave a Reply