திருவெறும்பூர் அருகே நியாய விலை கடையை எம்.பி குமார் திறந்து வைத்தார்.

திருவெறும்பூர் பகுதியில் செயல்படும் மக்கள் நலத்திட்டங்களையும், பணிகளையும் நாங்கள் தான் கொண்டு வந்தோம் எனக் கூறி விளம்பரம் தேடும் திமுக எம்.எல்.ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழியை, திருச்சி எம்.பி -யும், மாநகர மாவட்ட செயலாளருமான குமார் திருவெறும்பூர் அருகே உள்ள நியாய விலை கடையை திறந்து வைத்து பேசும்பேசும் போது தெரிவித்தார்.

திருச்சி எம்.பி குமார் திருச்சி மாநகராட்சி 63வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகர் பொதுமக்களின் வேண்டுகோலை ஏற்றுக்கொண்ட எம்.பி குமார் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் உள்ளுர் வளர்ச்சி திட்ட நிதியிலிருந்தி புதிய நியாய விலைக் கடை கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது.

மாநகர் மாவட்ட செயலாளராக பொருப்பேற்ற பிறகு இந்தப் பகுதியில் நடக்கும் முதல் விழாவாகும். 2019 ஆம் நிதி ஆண்டில் திருச்சி மாநகர் பகுதிகளில் ரூ.100 கோடியே 87 லட்சம் உள்ளுர் வளர்ச்சி நிதியின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும்.

அதேப்போல் கோவைக்கு அடுத்தப்படியாக ரூ 84 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகர காவல் அலுவலத்தில் இருந்து மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் வழிப்பாட்டு தளங்கள் பொதுமக்கள் கூடும் இடங்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமரா தனது உள்ளுர் வளர்ச்சி நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் இனி மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியூர் செல்வததென்றால் வீட்டை பூட்டிவிட்டு கவலை இல்லாமல் நிம்மதியாக சென்ற வரலாம் என்றார்.

மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குடிநீர் வசதி அமைப்பதற்கு மாநகராட்சி ரூ 369 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. அதன்படி பணி தொடங்கும் பகுதிகளில் பணியை தொடங்கி வைக்க வருவோம் என்றும் மேலும், திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் கேட்டுகொண்டதின் பேரில் திருவெறும்பூர் பகுதிகளில் பல லட்சம் செலவில் புதிய ரேசன் கடைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்.

அதேப்போல் பொன்மலைப் பகுதியில் பகுதிச்செயலாளர் பாலசுப்பிரமணி கேட்டுகொண்டதின் பேரில் தனது  தொகுதி வளர்ச்சி நிதியின் கீழ் கொட்டப்பட்டில் உள்ள கிராம நிர்வாக அலுவலருக்கு அலுவலக கட்டிடம் கட்ட ரூ.6 லட்சம் நதி ஒதுக்கி உள்ளதாகவும் ஆனால் நேற்று ஒரு மாலை இதழில் கிராம நிர்வாக அலுவலருக்கு அலுவலக கட்டிடம் இல்லை என்ற செய்தி வந்ததாகவும் கூறினார்.

மேலும், இப்பகுதியில் உள்ள குறைகளை பகுதி செயலாளர்களிடம் கேட்டு அதனை முதல்வர் எடப்பாடிக்கு கொண்டு செல்வதாகவும், அதன்படி திருவெறும்பூர் அருகே உள்ள கிளியூர் கல்லணை கால்வாய் ஆற்றில் பழுதடைந்திருந்த பாலத்தை புதுப்பிக்க தமிழக முதல்வர் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூபாய் 3 கோடி ஒதுக்கீடு செய்து கொடுத்து பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

ஆனால், சிலர் தான்தான் அந்த திட்டத்தை பெற்று தந்ததாகவும் தங்களுக்கு சாதகமான நாளிதழ்களை கையில் வைத்துக் கொண்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள் என்று திருவெறும்பூர் திமுக எம்.எல்.ஏ  அன்பில் மகேஷ்பொய்யாமொழியை தாக்கி பேசினார்.

மேலும் திருவெறும்பூர், முதல் குமரேசபுரம் வரை உள்ள சாலை ரூ 2 கேடியே 50 லட்சம்செலவில் புதுப்பிக்கப்பட உள்ளதாகவும், அதுப்போல் புறநகர் பகுதியில் 90 லட்சம் செலவிலும் 63வது வார்டுக்கு ஒரு கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கி தந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் துவாக்குடி முதல் பால் பண்ணை வரை திருச்சி தஞ்சை தேசியநெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணி நிர்வாக கோளரு காரணமாக மந்தமாக இருந்ததாகவும் தற்போது அந்தப்பணி முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மேலும் திருச்சி தஞ்சை தேசியநெடுஞ்சாலையில்  5 இடங்களில் சுரங்கப்பாதைகளும்  அமைய உள்ளதாகவும் கூறினார்.

அப்போதும் அந்த திட்டத்தை வரவிடாமல் தடுத்த கட்சியை சேர்ந்தவர்களே தான் கொண்டு வரப்போவதாக கலர்கலராக போஸ்கொடுக்கின்றனர் என்றும் அன்னில் மகேஷ்பொய்யாமொழியை தாக்கி பேசினார்.

அதேப்போல் அறை வட்ட சாலை பணிகள் அசூர் பகுதியில் தேக்கமடைந்துள்ளது என்றும் அந்த பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு வரும் டிசம்பர் மாத்திற்குள் பொதுமக்கள் போக்குவரத்திற்கு வரும் என்றார்.

அப்போது அந்தப்பகுதி பொதுமக்கள் இந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் சுமார் 3 ஆயிரம் மாணவ மாணவிகள் படிப்பதாகவும் அதனால் இந்தப்பகுதியில் ஒரு பயணியர் நிழற்குடை கொண்டு வர வேண்டமென்றும் கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த குமார் மற்ற தேசிய நெடுஞ்சாலைகளில் பயணியற் நிழற்குடை கட்டிதந்துள்ளதாகவும். ஆனால், இந்தப் பகுதியில் சர்வீஸ்ரோடு நாம் கேட்டு வருகிறோம் அதனால் அந்த சர்வீஸ்சாலை அமைத்த பிறகுதான் பயணியர் நிழற்குடை அமைத்து தருவேன். ஆனால் சிலர் தாங்கள் சர்வீஸ் ரோட்டுக்காக போராடுவதாக வெளியில் காட்டி கொண்டு நெடுஞ்சாலை ஓரத்தில் பயணியற்நிழற்குடை அமைக்கின்றனர் என்று அன்பில் மகேஷ்பொய்யாமொழியை மீண்டும் தாக்கி பேசினார்.

இந்த விழாவில் கூட்டுறவு சங்க பதிவாளர் பாலச்சந்திரன், மாநகர உதவி ஆணையர் தயாநிதி, 63வது வார்டு முன்னாள் கவுன்சிலர் வேல்முருகன், நிர்வாகிகள் சாம்பசிவம், குழந்தைவேல் மற்றும் நகர் நலச்சங்க நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஆர்.சிராஜுதீன்  

தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை, தமிழக அரசு உடனடியாகக் கைப்பற்ற வேண்டும்: தமிழக எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.
ஏலூர்பட்டி அருகே சாய்ந்து கிடக்கும் மின் கம்பத்தை சரிசெய்யாத மின் வாரிய அதிகாரிகள்!

One Response

  1. MANIMARAN May 16, 2018 9:17 pm

Leave a Reply