ஏலூர்பட்டி அருகே சாய்ந்து கிடக்கும் மின் கம்பத்தை சரிசெய்யாத மின் வாரிய அதிகாரிகள்!

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், ஏலூர்பட்டி என்ற ஊருக்கு மேற்கே 2 கிலோ மீட்டர் தூரத்தில், திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், சாலை ஓரத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக உயர் அழுத்த மின்சாரம் செல்லும் மின் கம்பம் கீழே சாய்ந்து கிடக்கிறது. மின் கம்பிகள் கைக்கு எட்டும் உயரத்தில் உள்ளது.

போர்கால அடிப்படையில் சரி செய்து மின் விநியோகத்தை சீர் செய்ய வேண்டிய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர்.

தற்போது சொந்த ஊருக்கு விடுமுறையில் வந்திருக்கும் மத்திய ரிசர்வ் காவல் படையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஏலூர்பட்டியை சேர்ந்த தங்கராஜ் என்பவர், தான் ஒரு காவல் துறை அதிகாரி என்பதை தெரிவிக்காமல், சாய்ந்து கிடக்கும் மின் கம்பம் சரிசெய்யப்படாமல் இருப்பது குறித்து, சம்மந்தப்பட்ட மின் வாரிய அதிகாரியிடம் கேட்டுள்ளார்.

அந்த அலைபேசியின் உரையாடலை, அவரின் அனுமதியோடு, நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

திருவெறும்பூர் அருகே நியாய விலை கடையை எம்.பி குமார் திறந்து வைத்தார்.
தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியம்!- திருச்சி தேசிய கல்லூரி எதிரில் வேகத்தடை அமைக்காதக்காரணத்தால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது.

Leave a Reply