உஷா உயிரிழந்த விவகாரம்!- போக்குவரத்து ஆய்வாளர் காமராஜிக்கு ஏப்ரல் 04-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

வாகனச் சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற இருசக்கர வாகனத்தைப் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று திருச்சி, திருவெறும்பூர், கணேசபுரம் பெல் ரவுண்டானா அருகே எட்டி உதைத்ததால், சாலையில் விழுந்த உஷா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள போக்குவரத்து ஆய்வாளர் காமராஜ்.

இந்த வழக்கில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை மார்ச் 21-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜின் நீதிமன்ற காவலை 04.04.2018 வரை நீட்டித்து JM-6 நீதிமன்ற நீதிபதி ஷகிலா இன்று உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜை நீதிமன்றத்திற்கு நேரில் அழைத்து வந்தால், ஏதாவது பிரச்சனை ஏற்படும் என்பதால், வீடியோ கான்பிரன்ஸி மூலம் ஆஜர்படுத்தி, இந்த காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காமராஜ்  தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிவையில், இன்று திருச்சி செசன்ஸ் நீதிமன்றத்தில் மீண்டும்  காமராஜ்  தரப்பில் ஜாமீன் மனு (CrMP 1411/2018) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனு 22.03.2018 விசாரணைக்கு வரவிருக்கிறது.

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

 

Leave a Reply