பாரதீய ஜனதா ஒரு அமைப்பின் குரலாகவே இருக்கும், காங்கிரஸ் ஒரு தேசத்தின் குரலாக இருக்கும்: டெல்லியில் நடைபெற்று வரும் 84-வது காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேச்சு.



மூத்த அரசியல் தலைவர்களின் அனுபவத்தையும் இளம் கட்சியினரின் வேகத்தையும்  ஒருங்கிணைத்து மாற்றத்தை கொண்டு வர பாடுபடுவோம் என்று டெல்லி இந்திரா காந்தி உள் அரங்கத்தில் நடைபெற்று வரும் 84 வது காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இம்மாநாட்டில் பாரதீய ஜனதாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

குருஷேத்ராவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக பெரும் போர் நடைபெற்றது. அப்போது கெளரவர்கள் மிகவும் பலம்வாய்ந்தவர்களாக இருந்தார்கள்இ ஆணவத்துடன் இருந்தார்கள். அவர்கள் சிறிய ராணுவம் கொண்ட பாண்டவர்களுடன் போரிட்டனர். பாண்டவர்கள் மிகவும் பணிவானவர்கள். அவர்கள் அதிகமாக பேசவில்லை. கெளரவர்கள் போன்று கிடையாது உண்மைக்காக போராடினர். இப்போது பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதிகாரத்திற்காக போராடுவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது.

பாண்டவர்களை போன்று காங்கிரஸ் உண்மைக்காக போராட வடிவமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரை பா.ஜனதா தலைவராக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் காங்கிரஸில் இது போன்ற ஒரு நகர்வை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்தியா ஒரு போதும் எங்களை பா.ஜனதா போன்று நடக்க செய்யாது. நாம் எதுவும் செய்யவில்லை என்றால் தண்டிக்கும். “பாரதீய ஜனதா ஒரு அமைப்பின் குரலாகவே இருக்கும், காங்கிரஸ் ஒரு தேசத்தின் குரலாக இருக்கும்” என்றார்.

பிரதமர் மோதி முக்கியமான நேரங்களில் அமைதியாகவே இருந்து வருகிறார். பாகிஸ்தானுக்கு செல்லாமல் இந்தியாவிற்காக போராடிய இஸ்லாமியர்களை இந்தியர்கள் கிடையாது என அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் தமிழர்களை அழகிய தமிழ் மொழியில் இருந்து மாறுமாறு வற்புறுத்துகிறார்கள்.

வடகிழக்கு மாநில மக்களிடம் நீங்கள் சாப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்நாட்டு மக்களிடையே வெறுப்பு உணர்வை ஆட்சியில் இருப்பவர்கள் பரப்பி வருகின்றனர்.

நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் நமது கடமை. நாடு அனைவருக்கும் சொந்தமானது. மக்களின் நன்மைக்காகவே காங்கிரஸ் பாடுபடும். 

மக்களின் கோபத்தை பாஜக பயன்படுத்துகையில், காங்கிரஸ் அன்பை பயன்படுத்திகிறது. கட்சியின் மூத்த,  இளம் தலைவர்களை இணைக்கும் பணியை மேற்கொள்ள உள்ளேன். முன்னேற விரும்பும் நாட்டுக்கு வழிகாட்ட காங்கிரசால் மட்டுமே முடியும்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்.

  -எஸ்.சதிஸ் சர்மா.

 

 

Leave a Reply