இரத்த தானம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்!-குடவாசல் ரத்ததான முகாமில் மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைகள்.

தமிழகத்தில் கடந்த 12 வருடங்களாக இரத்த தானத்தில் தொடர்ந்து முதலிடம் வகித்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குடவாசல் கிளை மற்றும் திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் இன்று 28.01.2018 காலை 10.00 மணியளவில் குடவாசல் அரசு மருத்துவமனையில் நடைப்பெற்றது.

இதில் முதன்மை குடிமுறை மருத்துவ அலுவலர் சீனிவாச ராகவன், மருத்துவர்கள் ரசூல்தீன், பாலகுமாரவேலு, நாச்சியார்கோவில் அரசு மருத்துவமனை மருத்துவர் சதீஷ்குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளரர்களாக குடவாசல் வட்டாட்சியர் பிரிதிவிராஜன் மற்றும் குடவாசல் காவல்  ஆய்வாளர் மணிமாறன், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குடவாசல் கிளை செயலாளர் சர்புதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  • விபத்துக்களில் சிக்கும் போது இரத்த இழப்பு ஏற்படுகிறது.
  • பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் போது கூடுதலாக இரத்தம் தேவைப்படுகிறது
  • இதுதவிர தலசீமியா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தீக்காயம் அடைந்தவர்களுக்கும்
  • இரத்த சோகை அதிகம் உள்ளவர்களுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் இரத்த இழப்பிற்கும், இரத்த புற்று நோய் தாக்கியவர்களுக்கும் உயிர் காக்கும் மருந்தாக இரத்தம் தேவைப்படுகிறது.

தாமாக முன்வந்து இரத்த தான செய்வதால் ஏற்படும் நன்மைகள்: 

மாரடைப்பு வருவது குறைக்கப்படுகிறது.

புதிய இரத்த அணுக்கள் உருவாகுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

இரத்த தானம் வழங்குவதால் ஒருவர் உடலில் 500 கலோரிக்கு மேலாக எரிக்கப்படுகிறது.

இவ்வாறு மருத்துவர்கள் கூறினார்கள்.

இரத்த தான முகாமில் அரசு மருத்துவமனை மருந்தாளுர் செல்வராஜ், மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

-க.குமரன்.

Leave a Reply