என்.சி.சி. குடியரசு தின முகாமை இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார்.

இந்தியாவில் “தேசிய மாணவர் படை” (National Cadet Corps) ஏப்ரல் 16, 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியாவில் 30 இலட்சம் பேர் தேசிய மாணவர் படையில் உள்ளனர். தமிழ‌த்‌தி‌ல் தேசிய மாணவர் படையில் ஒரு லட்சம் பேர் உள்ளனர். இந்த எண்ணிக்கையை வருடாவருடம் அதிகரிக்க   நடவடி‌க்கை எடு‌க்க‌ப்பட்‌டு வருகிறது.

1965 ஆண்டிலும், 1971 ஆண்டிலும் நடந்த இந்திய பாகிஸ்த்தான் போரில் இரண்டாம் வரிசை அணியினராக “தேசிய மாணவர் படை” நின்றது என்பது வரலாற்று புகழ் வாய்ந்த நிகழ்வாகும்.

இந்தியாவின் சுதந்திரத் தினம் மற்றும் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிகளில் “தேசிய மாணவர் படை” முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

இந்நிலையில், எதிர் வரும் குடியரசு தின விழாவை முன்னிட்டு, புதுடெல்லியில் உள்ள “தேசிய மாணவர் படை (என்.சி.சி.) குடியரசு தின முகாமை, இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார்.

என்.சி.சி. பல்வேறு சேவைகளைச் செய்வதன் மூலம் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் தேசத்தின் பாதுகாப்பில் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கி வருகிறது.

மதச்சார்பின்மை, தேசபக்தி, தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், கடின உழைப்பு, தலைமை பண்பு மற்றும் பிற குணாதிசயக் குணாம்சங்களை, என்.சி.சிஇளைஞர்களுக்கு வழங்கி வருகிறது.

இவ்வாறு இந்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

 

 

Leave a Reply