திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துக்கு காரணமாக இருக்கும் பெல் (BHEL) ரவுண்டானாவின் அளவை குறைக்கவும், மேம்பாலம் அமைப்பது குறித்தும் திட்ட அறிக்கை தயார் செய்ய முடிவு!


திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் பெல் (BHEL) ரவுண்டானாவின் அளவை குறைப்பது மற்றும் மேம்பாலம் அமைப்பது குறித்து 15 நாட்களில் கலந்து பேசி திட்ட அறிக்கை தயார் செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத்துறை தொழில்நுட்ப பிரிவு அதிகாரி அதிபதி தெரிவித்தார்.

திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழி சாலையாக மாற்றியப் பிறகு, பெல்  (BHEL)  கணேசபுரத்தில் உள்ள ரவுண்டானா அளவு பெரிதாக கட்டப்பட்டது. இதனால் அந்த இடத்தில் வாகனங்கள் வரும் போது கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்துக்கு உள்ளாகி உயிர் இழப்புகள் ஏற்படுகிறது.

இதுக்குறித்து நமது “உள்ளாட்சித்தகவல்” ஊடகத்தில் பல முறை செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ், இது சம்மந்தமாக நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சுதாகர்ரெட்டி மற்றும் துணைமேலாளரிடம் நேற்று கோரிக்கை மனு கொடுத்ததோடு, அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யும்படி கூறினார்.

அதன் அடிப்படையில், இன்று காலை திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பொ.மகேஷ், நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குநர் சுதாகர்ரெட்டி, நெடுஞ்சாலைத்துறை தொழில் நுட்பபிரிவு அதிகாரி அதிபதி மற்றும் பெல் (BHEL) சிவில் துறை பொது மேலாளர் நாகராஜன், பாதுகாப்பு துறை மேலாளர் பாஸ்கர், உதவி பொதுமேலாளர் அண்ணாதுரை, பெல் (BHEL)  தலைமை பாதுகாப்பு அதிகாரி பழனிவேல் ஆகியோர், இன்று பெல் (BHEL)  ரவுண்டானாவை நேரடியாக ஆய்வு செய்தனர்.

பின்னர் பெல் (BHEL) அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் கலந்துபேசி,  பெல் (BHEL) கணேசபுரத்தில் உள்ள ரவுண்டானா அளவை குறைப்பது குறித்தும், மேம்பாலம் அமைப்பது குறித்தும் 15 நாட்களில் திட்ட அறிக்கை தயார் செய்வோம் என்று உறுதியளித்துள்ளனர்.

-ஆர்.சிராசுதீன்.

 

Leave a Reply