திருச்சி மாவட்டத்தில் இம்மாதம் (ஜனவரி) 16 இடங்களில் ஜல்லிகட்டு போட்டி: சூரியூரில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி பேட்டி.

20180112_103011 20180112_110359 20180112_105011 20180112_103043

திருச்சி மாவட்டத்தில்  இம்மாதத்தில் (ஜனவரி) 16 இடங்களில் ஜல்லிகட்டு போட்டி நடத்தப்படுகிறது. அதில் 15-ம் தேதி சூரியூரில் நடைப்பெற்று வரும் ஜல்லிகட்டு போட்டிதான் முதற்போட்டியாகும். இந்த போட்டியில் செய்யப்பட்டுள்ள பணிகள் திருப்தியாக உள்ளது. அதேப்போல் 16-ம் தேதி மணப்பாறை ஆவாரங்காட்டில் நடைப்பெறுகிறது. இந்த இரண்டு போட்டிதான் பெரிய அளவில் இருக்கும்.

மேலும், புதிதாக இந்தமாதம் ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்காக 7 இடங்களில் அனுமதி கேட்டுள்ளனர். அதுகுறித்து அரசுக்கு தெரிவிக்கப்பட்டள்ளது. அனுமதி கிடைத்ததும் தெரிவிக்கப்படும். மேலும், ஜல்லிகட்டு போட்டியானது அரசு மற்றும் உயர்நீதி மன்றத்தின் வழிகட்டுதலின்படிதான் நடக்கும். போட்டியானது காலை 8 மணிக்கு தொடங்கி 2 மணிக்கு முடிவடையும். சூரியூரில் 400 முதல் 500 மாடுகள் பங்குபெறும். அந்த மாடுகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள். தகுதி இல்லை என்றால் அனுமதிக்கமாட்டார்கள்.

மேலும், மாடுபிடி வீரர்கள் 150 பேர் ஒரு பேஜ் என 3 பேஜாக பிரித்து களம் இறக்கப்படுவார்கள். மேலும், போட்டியில் கலந்து கொள்ளும் காளைகள் போட்டி முடிந்து போகும் போது பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாமலிருக்க வெளியில் வரும் போதே பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறந்த ஜல்லிகட்டு ஒரு மாடு மற்றும் ஒரு மாடுபிடி வீரருக்கு பைக்கும் வழங்கப்படும். மற்ற மாடுகளுக்கு சைக்கள், பீரோ, தங்ககாசு போன்ற பரிசுகள் வழங்கப்படும். இவ்வாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கல்யாண் கூறியதாவது:

கடந்த ஆண்டு ஜல்லிகட்டு போட்டியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. மேலும். இந்த ஜல்லிகட்டு போட்டியில் டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்இன்ஸ்பெக்டர் 50 பேர் உட்பட 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். மேலும், சூரியூரில் ஜல்லிகட்டு மாடு பதிவுவோடு தற்போது ஜல்லிகட்டு மாடு பிடி வீரர்களின் பதிவும் தொடங்கியுள்ளது என்றார்.

-ஆர்.சிராசுதீன்.

Leave a Reply