பெல் (BHEL )நிறுவன ஒப்பந்தக்காரர் வீட்டில் 53 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணம் திருடியவர் கைது!

S4270046

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடக்கு காட்டூர், பாத்திமாபுரம், 6-வது தெருவை சேர்ந்தவர் சையதுகலில் அகமது மகன் சையத் ஆசாத் (வயது 33), இவர் பெல் (BHEL) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை எடுத்து ஆட்களை வைத்து வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஜீன் மாதம் வீட்டை பூட்டி விட்டு ஆதார் கார்டுக்கு போட்டோ எடுப்பதற்காக சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தப்போது, வீட்டு கதவு திறந்து கிடந்துள்ளது.

பக்கத்திலிருக்கும் அக்காதான் திறந்திருப்பார் என்று அதுப்பற்றி யோசிக்காமல் சென்ற விட்டார்.  இந்நிலையில், மறுநாள் காலை ஒருவருக்கு பணம் கொடுப்பதற்காக பீரோவை திறந்து பார்த்தப்போது, பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் பணம் மற்றும் 53 சவரன்  நகை காணாமல் போனது தெரியவந்தது.

இதுசம்மந்தமாக சையது ஆசாத் திருவெறும்பூர் காவல்நிலையத்தில் அப்போது புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில், கொள்ளை நடந்து 4 மாதங்களுக்கு பிறகு, சையத் ஆசாத் வீட்டு மாடியில் வாடகைக்கு குடியிருந்த பிரபு (வயது 25) என்பவரை பிடித்து விசாரணை செய்தப்போது அவர் திருடியதை ஒத்து கொண்டார்.

மேலும், பாப்பாகுறிச்சி பழைய தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் மனைவி கோகிலா (வயது 35), இவர் சித்தாள் வேலைப்பார்த்து வருகிறார். இவர் பிரபுவிற்கு அக்காள் உறவு முறையாகும். அவரிடம் தான் கொள்ளையடித்த 53 சவரன் தங்க நகைகளை கொண்டுபோய் பிரபு கொடுத்துள்ளார். அவர் ஏது என்று கேட்டப்போது, தனது தாய் சாகும் போது அவரது நகையை என்னிடம் கொடுத்திருந்தார் அந்த நகைதான் இது என்று பிரபு கூறியுள்ளார்.

மேலும், கோகிலாவிடம் நீங்கள் ஒரு 5 பவுன் நகையை எடுத்து தாலி சங்கிலி செய்து போட்டு கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில், திருடிய நகையில் கவர்னர் மாலையை எடுத்து அழித்து, கோகிலா 5 பவுன் தாலி சங்கிலி செய்து போட்டு கொண்டுள்ளார்

பின்னர் ஒவ்வொரு நகையாக பிரபு வாங்கி அடகு வைத்து ஜாலியாக சுத்தியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில், பிரபு மற்றும் கோகிலாவை திருவெறும்பூர் போலீசார் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்

-ஆர்.சிராசுதீன்.