ஆங்கில பாடத்தில் 85 சதவித பேர் தோல்வி : கல்லுரி மாணவ, மாணவிகள் சாலை மறியல்!

Photo0020IMG_0030(1) IMG_0035(1)IMG_0032(1)திருச்சி மாவட்டம், முசிறியில் இன்று (01-08-2014) மதியம் 12 மணியளவில் அறிஞர் அண்ணா அரசுக் கலை கல்லுரி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

இதையறிந்த காவல்துறையினரும், கல்லூரியின் முதல்வரும் அவ்விடத்திற்கு விரைந்து வந்தனர். உடனே, சாலை மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது, மாணவர்கள் கீழ்காணும் கோரிக்கைகளை முன் வைத்தனர். பாரதிதாசன் பல்கலைக்கழகம் (இளங்கலை, இளம்வணிகவியல்) முதலாம், இரண்டாம் ஆண்டு மதிப்பெண்கள் பட்டியலை 31.07.2014 அன்று வெளியிட்டனர்.

அதில் ஆங்கில பாடத்தில் 85 சதவித மாணவ, மாணவிகள் தோல்வியை சந்தித்தனர். இதற்கான காரணத்தை ஆங்கிலத் துறைத் தலைவர் ஆ.பெ.முருகராஜ் பாண்டியனிடம் கேட்டதற்கு தாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்று கூறிவிட்டார்.

அடுத்து, பல்கலைக் கழக மேலாளரை கேட்டதற்கு, நீங்கள் மறுகூட்டலுக்கு பதிவு செய்யுங்கள் என்று கூறிவிட்டார். அதனால் முதற்கட்டமாக போரட்டத்தை ஆரம்பித்துள்ளோம். இதற்கான நேர்மையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், மீண்டும் மாபெரும் போரட்டத்தை நடத்துவோம் என்று ஆவேசமாக கூறினார்கள். அதன் பிறகு மாணவ, மாணவிகள் போரட்டத்தைக் கைவிட்டு களைந்து சென்றனர்.

-பி.மோகன்ராஜ்.