39 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய அரசுக் கட்டடங்களுக்கு: தமிழக முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்

pr210213cமுதல்வர் தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 11 மாவட்ட தொழில் மையங்களுக்கு 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்கள், 18 மாவட்டங்களிலுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகங்களுக்கு 22 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்கள், என மொத்தம் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இது குறித்து வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பு:

முதல்வர் சென்னையிலுள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு கிண்டி தொழிற்பேட்டையில் 1.91 ஏக்கர் நிலப்பரப்பில் 4 கோடியே

88 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக நவீன வகுப்பறைகளுடன் கட்டப்படவுள்ள பயிற்சி வளாகக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டி, தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ள தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக் கையேடு மற்றும் குறுந்தகட்டினை வெளியிட்டார்.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதிலும், குறைந்த முதலீட்டில் அதிக நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்கு ஈடு இணையற்றது. படித்த இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்க அரசு பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

pr210213dமாவட்ட தொழில் மையங்களின் பணிகள் நவீன முறையில் மேம்படுத்தப்படும் எனவும், ஏற்கெனவே சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகக் கட்டடங்கள் தேவைக்கேற்ப நவீன வசதிகளுடன் சீரமைக்கப்படும் எனவும், தேவை உள்ள இடங்களில் கூடுதல் கட்டடங்கள் கட்டித் தரப்படும் எனவும், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகங்களுக்கு நவீன வதிகளுடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும் எனவும் முதல்வர் அறிவித்தார்கள். மேலும், இம்மையங்களுக்குத் தேவையான கணினிகளுடன், தகவல் மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்கள் நிறுவப்படுவதுடன், இம்மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும் எனவும் இப்பணிகள் அனைத்தும் 50 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் 11.5.2012 அன்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.

அதன்படி, சென்னை, அரியலூர், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், திருவண்ணாமலை, தேனி, திருவாரூர், திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 11 மாவட்ட தொழில் மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்ட ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டடங்கள்; கடலூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், விருதுநகர் மற்றும் வேலூர் ஆகிய 18 மாவட்டங்களிலுள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகங்களுக்கு 22 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கூடுதல் கட்டடங்கள்; என மொத்தம் 39 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய கட்டடங்களுக்கு முதல்வர் 20.2.2013 அன்று அடிக்கல் நாட்டினார்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்ட தொழில் மைய அலுவலகங்களுக்கு 2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டடங்களைப் புதுப்பித்தல்; மாவட்ட தொழில் மையங்களுக்குத் தேவையான கணினிகள், தகவல் மற்றும் தொலை தொடர்பு சாதனங்கள் நிறுவுதல், மாவட்ட தொழில் மைய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு 8 கோடியே 58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு, என மொத்தம் 11 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் 20.2.2013 அன்று தலைமைச் செயலகத்தில், படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் “புதிய தொழில்முனைவோர்-தொழில் நிறுவன வளர்ச்சி திட்டம்” எனும் புதிய திட்டத்தினைத் தொடங்கி வைத்து, இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்ற 7 பயனாளிகளுக்கு பயிற்சிக்கான ஆணைகளை வழங்கினார்கள்.

தமிழ்நாட்டில் சிறு தொழில் துறையில் புரட்சி ஏற்படுத்தும் நோக்கத்தோடு ஆண்டொன்றுக்கு 100 கோடி ரூபாய் செலவில் படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக மாற்ற உதவும் நோக்குடன் “புதிய தொழில்முனைவோர்-தொழில் நிறுவன வளர்ச்சி திட்டம்” எனும் புதிய திட்டத்தை 2012-13-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்த முதல்வர் ஆணையிட்டார்கள். இத்திட்டத்தின் கீழ் படித்த இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளித்து அவர்களுக்கு 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட மதிப்பீட்டில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் நிறுவனங்களைத் துவங்க 25 விழுக்காடு மானியம் மற்றும் 3 விழுக்காடு பின்முனை வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்றுத்தரப்படும்.

இத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் 50 விழுக்காடு மகளிர் உள்ளிட்ட 1000 புதிய தொழில் முனைவோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வங்கிகள் மூலம் தொழில் தொடங்க வட்டி மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. மேலும், தொழில் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டுவரும் மாவட்ட தொழில் மையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தைச் செயல்படுத்த முதல்வர் 51 கோடியே 80 லட்சம் ரூபாய் அனுமதித்துள்ளார்கள்.

அதன்படி, முதல்வர் 20.2.2013 அன்று தலைமைச் செயலகத்தில், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தினை தொடங்கி வைத்து, இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்ற 7 பயனாளிகளுக்குப் பயிற்சிக்கான ஆணைகளை வழங்கினார்கள்.

தமிழ்நாடு சிறு தொழில் நிறுவனத்தின் (டான்சி) 2011-12-ஆம் ஆண்டிற்கான வருமானத்தில் மொத்த விற்பனையளவில் 10 விழுக்காடு நியமனக் கட்டணமான 9 கோடியே 3 லட்சத்து 59 ஆயிரத்து 610 ரூபாய் மற்றும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) 2011-12 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் பங்கான 10 விழுக்காடு ஈவுத் தொகை 87 லட்சம் ரூபாய், என மொத்தம் 9 கோடியே 90 லட்சத்து 59 ஆயிரத்து 610 ரூபாய்க்கான காசோலைகளை முதல்வரிடம் 20.2.2013 அன்று தலைமைச் செயலகத்தில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் ப. மோகன் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊரகத் தொழில்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் இயக்குநர், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளர், தொழில் வணிகத் துறை ஆணையர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Leave a Reply