ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சுமார் 20 அடி பள்ளத்திற்குள் வயலுக்குள் உருண்டு தலைக்குப்புற கவிழ்ந்தது! திருச்சி – கல்லணை சாலையில் நடந்த விபரீதம்.

திருச்சி மாவட்டம், காவிரி வலதுகரை திருச்சி, சர்கார்பாளையம் வழியாக கல்லணை செல்லும் சாலையில், கீழமுல்லக்குடி ஊராட்சிக்குட்பட்ட புத்தாபுரம் கிராமம் அருகே, இன்று (17.12.2020) காலை 11 மணியளவில் சாலையில் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 20 அடி பள்ளத்திற்குள் நெல் நடவு செய்துள்ள வயலுக்குள் உருண்டு தலைக்குப்புற கவிழ்ந்தது. நல்ல வேளை அதிஷ்டவசமாக காரில் இருந்த பெண்கள் உள்பட அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவெறும்பூர் காவல்துறையினர், இந்த விபத்துக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலிசார் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் உதவியுடன் விபத்துக்குள்ளான அந்த கார் கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

-கே.பி.சுகுமார், படங்கள்: எஸ்.வி.என்.தினேஸ்.

Leave a Reply