ஏற்காடு காவல் நிலையம் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு, ஜீன் 25 அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்த அப்பெண் வசிக்கும் பகுதியை ஒட்டிய 3 தெருக்கள் மூடப்பட்டன. அப்பகுதியில் வசிக்கும் முதியவர்கள் மற்றும் இரத்த அழுத்தம் உள்ளவர்களிடம் கொரோனா சோதனைக்காக சளி மாதிரியை சுகாதார துறையினர் சேகரித்தனர். அப்பகுதியில் சேகரித்த 18 நபர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று உறுதியாகியது.
மேலும், ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகம், சார் – பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் நபர்களுக்கும் மற்றும் சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு காய்கறிகளை கொண்டு வந்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் என 64 நபர்களுக்கு, மருத்துவர் தாம்சன் தலைமையிலான சுகாதார துறையினர் கொரோனா சோதனைக்காக சளி மாதிரிகள் சேகரித்தனர்.
–நே.நவீன் குமார்,
