மாலத்தீவு, மொரீஷியஸ், கொமொரோஸ் தீவுகள் மற்றும் போர்ட் விக்டோரியா (சீஷெல்ஸ்) ஆகிய இடங்களில் 580 டன் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை விநியோகிக்கும் பணிகளில் இந்திய கடற்படைக் கப்பல் ”ஐ.என்.எஸ் கேசரி ” ஈடுப்பட்டு வந்தது.
மேலும், 14 உறுப்பினர்களைக் கொண்ட கடற்படை மருத்துவ உதவிக் குழுவும் மொரீஷியஸ் மற்றும் கொமொரோஸுக்கு தலா 20 நாட்கள் நியமிக்கப்பட்டு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணிக்கு பேருதவி புரிந்தது.
உள்ளூர் அதிகாரிகளுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை கொண்டு செல்வதற்கும் ”ஐ.என்.எஸ் கேசரி ” தென்னிந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் 55 நாட்கள் ஈடுப்படுத்தப்பட்டது.
கொரோனா விழிப்புணர்வு மற்றும் நிவாரணப் பணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய கடற்படைக் கப்பல் ”ஐ.என்.எஸ் கேசரி ” தற்போது கொச்சியில் முகாமிட்டுள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
