திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில், திருவெறும்பூர் மேம்பாலத்தில் இருச்சக்கர வாகனத்தின் மீது, இன்று (ஜூன்-5) மாலை 5:30 மணியளவில் லாரி மோதியதில், வாலிபர் ஒருவர் தலை நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார்.
லாரி ஓட்டுனர் சேலம், வீரானூரை சேர்ந்த மணிகண்டன் வயது 41 தபெ பெருமாள் கைது செய்யப்பட்டார்.
தலை நசுங்கி பலியான நபர், கல்லணை அருகே உள்ள தோகூர், மாதாகோவில் தெருவைச் சேர்ந்த லாசர் பாஸ்டின் வயது 30 தபெ ஆல்பெர்ட் என்பது காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
நவல்பட்டு புதுத்தெருவில் உள்ள தன் அக்கா ஞானதீபம் வயது34, கபெ செந்தில் என்பவரை அவரது வீட்டில் விட்டு,தோகூர் நோக்கி செல்லும்போது திருவெறும்பூர் மேம்பாலத்தில் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திருவெறும்பூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-ஆர் .சிராசுதின்
