சேலம் மாவட்டம், ஏற்காட்டிற்குள் நுழையும் நபர்கள் குறித்த விபரங்களை சுகாதார துறையினர் சேகரித்து வருகின்றனர். ஏற்காட்டிற்கு வரும் வாகனங்களை மலைப் பாதையில் 20-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் நிறுத்தி, எங்கிருந்து வருகின்றனர்? எந்த மலைக் கிராமத்திற்கு செல்கின்றனர்? என சுகாதார துறையினர் விபரங்கள் கேட்டறிகின்றனர்.
பின்னர் வெளி மாநிலங்கள், சென்னை மற்றும் சிவப்பு மண்டலங்களில் இருந்து வரும் நபர்களிடம் இருந்து உடனடியாக ”கொரோனா” சோதனைக்கான மாதிரிகளை சேகரிக்கின்றனர். மேலும், அவர்களை தனிமைப்படுத்துகின்றனர். அங்குள் தன்னார்வ இளைஞர்கள் ஏற்காட்டிற்குள் நுழையும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கின்றனர்.
-நே.நவீன் குமார்.
