உண்ண உணவில்லை, குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணமில்லை, பட்டினியோடு இருக்கின்றோம் என்ற கோரிக்கையோடு, திருச்சி மாவட்டம், துவாக்குடி நகராட்சிப் பகுதிக்கு உட்பட்ட, துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் வசிக்கும் பொது மக்களிடமிருந்து, எமது “உள்ளாட்சித்தகவல்” அலுவலகத்திற்கு இன்று (12.04.2020) மாலை ஒரு கடிதமும், சில படங்களும் மற்றும் 2 வீடியோவும் வந்தது.
இத்தகவலை, தமிழக முதலமைச்சருக்கும் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அனுப்பி வைத்துள்ளோம்.
“நோயை விட பசி மிக கொடிமையானது” என்பதை நாம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எனவே, போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து, ஒட்டு மொத்த ஏழை மக்களின் கண்ணீரையும், தமிழக அரசு துடைக்கும் என்று முழுமையாக நம்புகின்றோம்.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Very sad Incident……