பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி துறை  சார்பில், குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி துறை  சார்பில், மானச மித்ரா வித்யாபீடம் சிறப்புப் பள்ளியில் “குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியை பிஷப் ஹீபர் கல்லூரி சமூகப்பணி துறை மாணவி M.G ஹாஜிரா மெஹராஜ் சுபானா ஏற்பாடு செய்து இருந்தார்.

குழந்தைகள் மீதான வன்முறைக்கு எதிரான கூட்டமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் S பிரபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும், பேராசிரியர் முனைவர் M. டேனியல் சாலமன் மற்றும் வஹீதா.S.காண் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் சிறப்பு உரையை கேட்டு பயனடைந்தனர்.

-துரைதிரவியம்.

Leave a Reply