முற்காலம் முதல் தற்காலம் வரை!- இந்திய – இலங்கை வர்த்தக உறவுகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம் திருச்சியில் நடைப்பெற்றது.

திருச்சிராப்பள்ளி, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியின் வணிகவியல் துறைச் சார்பில் இந்திய வெளியுறவு விவகார நிறுவனத்தின் நிதியுதவியுடன் “இந்திய இலங்கை வர்த்தக உறவுகள் – முற்காலம் முதல் தற்காலம் வரை” என்னும் தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைப்பெற்றது.

இக்கருத்தரங்கில் வணிகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் எம்.ஹேமநளினி வரவேற்புரையாற்றினார். கருத்தரங்க நோக்க உரையினை வணிகவியல் துறைத் உதவிப்பேராசிரியரும், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளருமான செ.பரமசிவன் வழங்கினார்.

கருத்தரங்கதின் தலைமையுரையினை முதல்வர் ஐ. ஜீலி நிகழ்த்தினார். கருத்தரங்கின் மைய உரையினை இந்திய வெளியுறவு விவகார நிறுவனத்தின் ஆராய்ச்சியார் முனைவர் பிரியங்கா பண்டிட் நிகழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கவுரையினை இலங்கை தென்கிழக்கு மாகாண பல்கலைக்கழக மேலாண்மைத்துறை பேராசிரியர் எம்.பி.எம். இஸ்மாயில் சிறப்புரையாற்றினார்.

மேலும், இந்நிகழ்சியின் புதுவை மத்திய பல்கலைக்கழக பன்னாட்டு வணிகத்துறையின் தலைவர் மற்றும் பேராசிரியர் பூசன் டி.சுதாகர், திருவெறும்பூர் அரசு கல்லூரி முதல்வர் அ. மேகலா, திண்டுக்கல் ஜி.டி.என். அரசு கல்லூரி பொருளியல் இணைப்பேராசிரியர் ரவிச்சந்திரன், தொழில் அதிபர் அர்சார் சிங், மதுரை வெள்ளச்சாமி நாடார் கல்லூரி பேராசிரியர் சந்திரசேகரன், விவேகானந்தர் மகளிர் கல்லூரி உதவிப்பேராசிரியர் செல்வம், சி.எம்.எஸ் கல்லூரி பேராசிரியர் மாரிச்செல்வம் மற்றும் ஜெயந்திர சரஸ்வதி கல்லூரி பேராசிரியர் மாயக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

ஆய்வாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை சமர்பித்தனர். இக்கட்டுரைகளை தொகுத்து சிறப்பு பதிப்பாக வெளியிடப்பட்டது.

இந்நிகழ்சியில் 200-க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்துக் கொண்டார்கள்.

நிறைவாக வணிகவியல் துறைத் உதவிப் பேராசிரியர் பி. கண்ணன்  நன்றியுரை வழங்கினார். 

-துரை திரவியம்.

Leave a Reply