உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு!

சேலம் மாவட்டம், ஏற்காடு வட்டம், செம்மந்ததம் பஞ்சாயத்திற்குட்பட்ட எஸ்.நார்த்தசேடு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க போவதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.

நேற்று காலை ஏற்காடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த கிராம மக்கள், கடந்த 1988 ஆம் ஆண்டு எஸ்.நார்த்தஞ்சேடு கிராமத்தில் தனியார் எஸ்டேட்டிற்கு வனத்துறைக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்கியதால், நார்த்தஞ்சேடு கிராமத்தின் கணக்குகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்தது. அப்போது அரசிற்கு ஆதரவாக தீர்ப்பு வந்தது.

இதனையடுத்தும் எஸ்.நார்த்தஞ்சேடு கிராம கணக்குகள் கணிணியின் பதிவேற்றப்படவில்லை. இதனால் தங்கள் மூதாதையர் பெயரில் உள்ள நிலத்தினை தங்கள் பெயருக்கு மாற்றமுடியாமலும், நிலங்களை விற்கவும், வாங்கவும் முடியாமல் தவித்து வருவதாக கூறி கிராம மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்

அவர்களிடம் ஏற்காடு வட்டாட்சியர் முருகேசன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவரும் வெள்ளிக்கிழமைக்குள் இதற்கு தீர்வு கிடைக்கும் என கூறினார். இதனையடுத்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமையும் இதற்கான தீர்வு கிடைக்காவிட்டால் நடைபெற உள்ள உள்ளாட்சி மன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர்.

-நே.நவீன் குமார்.

 

 

 

 

 

 

 

Leave a Reply