கடந்த மார்ச் மாதம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண் முகிலன் மீது பாலியல் புகார் கொடுத்து உள்ளார். அதற்கு முன்பாகவே முகிலன் (பிப்ரவரி 15) மாயமாகிவிட்டதால், இந்த புகார் உள்பட முகிலன் சம்மந்தமான அனைத்து புகார் மனுக்களும் சிபிசிஐடி–யிடம் ஒப்படைக்க்கப்பட்டு, முகிலனை தீவிரமாக தேடும் பணி நடைப்பெற்று வந்தது.
இந்நிலையில் 140 நாட்களுக்கு பிறகு, நேற்று திருப்பதி இரயில்வே போலிசாரிடம் முகிலன் சிக்கியுள்ளார். நேற்று இரவு காட்பாடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட முகிலனை, இன்று காலை காட்பாடி போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
1.முகிலனை யாரவது கடத்தினார்களா? (அல்லது) பாலியல் புகாருக்கு பயந்து முகிலன் தலைமறைவாக இருந்தாரா?
2.கடந்த 140 நாட்களாக இவர் எங்கு இருந்தார்? இந்த காலக்கட்டத்தில் இவர் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார்?
3.நேற்று இரவு திடீரென திருப்பதி இரயில்வே ஸ்டேஷனுக்கு முகிலன் வர வேண்டிய அவசியம் என்ன?
4.முகிலன் ரயில்வே போலீஸார் வசம் இருப்பதாக முகிலன் குடும்பத்தாரிடம் சொன்ன சண்முகம் யார்? அதெப்படி முகிலன் திருப்பதி இரயில்வே ஸ்டேஷனில் கோஷமிடும் நேரம் பார்த்து சண்முகம் அந்த வழியாக வந்தார்?
இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் இதுவரை விடைக்கிடைக்காத நிலையில், கடந்த மார்ச் மாதம் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண் முகிலன் மீது கொடுத்த பாலியல் புகாரின் பேரில் IPC 376-வன்புணர்ச்சி, IPC 417–வஞ்சித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் முகிலன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
“எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்தாலும், போராளியாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கமில்லை என்றால், இதுபோன்ற அவமானங்களை சந்தித்தே ஆக வேண்டும்’.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
