திருச்சி மாவட்டம். திருவெறும்பூர் வட்டம். கீழ முல்லக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் கிராமத்தில் வசிக்கும் ஜெயராக்கினி. யாகுலராஜ் என்பவர்களின் குடிசை இன்று (07.07.2019) மதியம் 3 மணியளவில் திடீரென தீப்பற்றிக்கொண்டது. அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இத் தீ விபத்தில் குடிசைக்குள் இருந்த நெல், அரிசி உள்பட அனைத்துப் பொருட்களும் சேதமடைந்தன. அருகில் இருக்கும் தென்னை மரம் தீ புகையில் கருகி ஆபத்தான நிலையில் உள்ளது.
தகவலறிந்த நமது “உள்ளாட்சித்தகவல்” ஆசிரியர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டதோடு, தீ விபத்து குறித்து கீழ முல்லக்குடி கிராம நிர்வாக அலுவலர் சூசை ஆரோக்கியராஜிடம் அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து, தகவல் கிடைத்த 30 நிமிடத்திற்குள் நிர்வாக அலுவலர் சூசை ஆரோக்கியராஜ் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு, சேத விபரங்களை உடனே வருவாய் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நிவாரணம் வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.
-கே.பி.சுகுமார்.
