தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று (03.12.2015) காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோதி அரக்கோணத்தில் உள்ள விமானப்படை தளத்திற்கு வந்தார்.
அங்கிருந்து அடையாறு வந்த பிரதமர் நரேந்திர மோதியை, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் தமிழக ஆளுநர் ரோசய்யா ஆகியோர் வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோதி, செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு ஏற்கனவே, மத்திய அரசு சார்பில் ரூ.939.53 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. தற்போது வெள்ள சேதம் அதிகமாக இருப்பதால், தமிழகத்திற்கு கூடுதலாக ரூ.1000 கோடி நிதி உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் ரூ.1000 கோடி நிதியை தமிழகத்திற்கு உடனடியாக வழங்க, மத்திய அரசு இன்று (03.12.2015) மாலை ஆணைப்பிறப்பித்துள்ளது.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
